பாடசாலை மாணவர்களை காப்பாற்றுவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று “பாதுகாப்பான நாளை” எனும் தொனிப்பொருளில் கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலானது பதில் பொலிஸ் மா அதிபர் தேஸபந்து தென்னகோனின் யோசனைக்கு அமைய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில்,
போதைப்பொருள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் போன்றவற்றின் ஆபத்தில் இருந்து மாணவர்களை காப்பாற்றுவது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் ஷக்ய நாணயக்கார, தேசிய விஞ்ஞான அறக்கட்டளையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செபாலிகா நயனி சுதாசிங்க, உள்ளிட்டவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.