77
யாழ்ப்பாணம் – பொன்னாலை பகுதியில் கஞ்சா விற்றவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொன்னாலை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் நேற்றுவெள்ளிக்கிழமை மதியம் கைது செய்யப்பட்டார்.
விசேட அதிரடிப் படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் அனலைதீவில் இருந்து வந்து பொன்னாலை தெற்கில் திருமணம் செய்து வாழ்ந்து வருபவர் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரிடமிருந்து பல லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா பொதிகளும் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.