Home » சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பயணிகள் விமானம் திருப்பி அனுப்பப்பட்டது

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பயணிகள் விமானம் திருப்பி அனுப்பப்பட்டது

by namthesamnews
1 comment

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பயணிகள் விமானம், மோசமான
காலநிலையால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல்
மீண்டும் சென்னைக்குத் திரும்பியது.

நேற்றுக் காலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம்
சர்வதேச விமான நிலையம் நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானம், யாழ்ப்பாணம்
சர்வதேச விமான நிலையத்தில் நிலவிய மோசமான காலநிலையால் தரையிறங்க
முடியாமல் மீண்டும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்த விமானம் இன்று காலை மீண்டும் யாழ்ப்பாணம் வரும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் மொத்தமாக 24 பயணிகள் பயணித்த நிலையில்
அவர்களுக்கான மாற்றுப் பயணச்சீட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள ஹோட்டல்களில் நேற்று தங்க வைக்கப்பட்டனர்.

You may also like

1 comment

பொன்னாலையில் கஞ்சா விற்றவர் கைது! - Namthesam Tamil News November 25, 2023 - 5:13 pm

[…] யாழ்ப்பாணம் – பொன்னாலை பகுதியில் கஞ்சா […]

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00