மட்டக்களப்பு தரவை மாவீரர் இல்லத்தில் நினைவேந்தலில் போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 4 பேரையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செல்வதற்கு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று இந்த(19) உத்தரவினை வழங்கியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி கிரான் பிரதேசத்திலுள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் இடத்தை அலங்கரித்த கொடிகள் கம்பங்கள் ஜெனரேற்றர்.
ஒலிபெருக்கி என்பவற்றை கழற்றி வாகனத்தில் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு திரும்பினர்.
இதன் போது சின்னத்தம்பி காஞ்சிநிதி, ஒலிபெரிக்கி உரிமையாளரான 43 வயதுடைய பிரான்சிஸ் அன்ரனி நியூட்டன், அவரது மகனான 19 வயதுடைய நியூட்டன் சதுர்சன், வாகன சாரதியான 33 வயதுடைய சண்முகநாதன் நவஜீவன் ஆகிய 4 பேரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தில் வாழைச்சேனை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களை பிணையில் விடுவிப்பதற்கான நகர்வு விண்ணப்ப பத்திரத்தை அவர்கள் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நேற்று நீதிமன்றத்தில் விண்ணப்பித்ததை அடுத்து குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நிலையில் 4 பேரையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்வதற்கு உத்தரவிட்டுள்ளது.