2023ம் ஆண்டு ஐந்தாம் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரி ஆரம்ப பிரிவைச் சேர்ந்த ஜெராட் அமல்ராஜ் வனிஷ்கா என்ற மாணவி 196 புள்ளிகளை பெற்றுள்ளார்.
இதன்மூலம் வரலாற்றில் முதல் தடவையாக யாழ் இந்து மகளீர் கல்லூரி யாழ் மாவட்டத்தில் அதிக புள்ளிகளை பெற்று முன்னிலை வகிக்கிறது என யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரி இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபர் சிவந்தினி வாகீசன் தெரிவித்தார்.
2023 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு எமது கல்லூரியில் இருந்து 110மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 35 மாணவர்கள் பரீட்சையில் சித்தி அடைந்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். அதிலும் வரலாற்றில் முதன்முதலாக யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிக புள்ளிகளை பெற்று எங்கள் பாடசாலை மாணவி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்
பரிட்சையில் அதிக புள்ளியினை பெற்ற மாணவி கருத்து தெரிவிக்கையில், தன்னை போன்று எதிர்காலத்தில் மாணவர்கள் அதிக புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமையை சேர்க்க வேண்டும் எனவும் எதிர்காலத்தில் தான் விஞ்ஞானியாக வந்து இலங்கைக்கு பெருமை சேர்ப்பேன் எனவும் தெரிவித்தார்.
1 comment
[…] யாழ்ப்பாண மாவட்டத்தில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவை […]