106
இந்த தொழில்நுட்ப யுகத்தில் நாம் அனைவருமே ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகிறோம்.
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் இன்றியமையாததாக மாறிவருகிறது.
ஒவ்வொருவருடைய தேவைகளை எளிதாக பூர்த்தி செய்துகொள்ளும் வசதிகளுடன் ஸ்மார்ட்போன்கள் வலம் வருகின்றன.
இந்நிலையில் உலகில் அதிகமாக ஸ்மார்ட்போன்களை உபயோகிக்கும் நாடுகள் பட்டியல் வெளியாகி உள்ளது.
10வது இடத்தில் 73 மில்லியன் பயனாளர்களுடன் பாகிஸ்தான் உள்ளது.
9வது இடத்தில் 78 மில்லியன் பயனர்களுடன் மெக்சிகோ உள்ளது.
8வது இடத்தில் 83 மில்லியன் பயனாளர்களுடன் நைஜீரியா உள்ளது.
7வது இடத்தில் 97 மில்லியன் பயனாளர்களுடன் ஜப்பான் உள்ளது.
6வது இடத்தில் 106 மில்லியன் பயனாளர்களுடன் ரஷ்யா உள்ளது.
5வது இடத்தில் 143 மில்லியன் பயனாளர்களுடன் பிரேசில் உள்ளது.
4வது இடத்தில் 187 மில்லியன் பயனாளர்களுடன் இந்தோனேசியா உள்ளது.
3வது இடத்தில் 276 மில்லியன் பயனாளர்களுடன் அமெரிக்கா உள்ளது.
இரண்டாவது இடம் வகிக்கும் இந்தியாவில் 659 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தபடுகிறது.
மக்கட்த்தொகையில் முன்னணியில் உள்ள சீனாவே இதிலும் முதலிடம் வகிக்கிறது. சீனாவில் 974 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் உள்ளது.