81
காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்தனர்.
கிஷ்த்வார் எனும் பகுதியில் இருந்து ஜம்முவுக்கு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
தோடா பகுதியை பேருந்து கடக்கும்போது எதிர்பாராத விதமாக 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 33 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பின்னர் பலி எண்ணிக்கை 39 ஆக உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டத்துடன் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
பொலிஸார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது பதிவில், ‘ தங்களின் நெருங்கிய உறவுகளை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் ‘ என இரங்கல் தெரிவித்துள்ளார்.