92
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கொலை மிரட்டல் விடுத்த இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள மஹிந்தவின் இல்லத்திற்கு முன்னால் குறித்த சிப்பாய் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியுள்ளார்.
மஹிந்தவின் இல்லத்திற்கு முன் நடமாடிய குறித்த சிப்பாய் மஹிந்தவை கொலை செய்வேன் என அங்கிருந்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அங்கு சென்ற பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் கிரிவெல பகுதியைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கைதான சந்தேகநபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.