82
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பில் கருத்த்துக்கூற முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச மறுத்து விட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பில் மஹிந்த ராஜபக்சவிடம் ஊடகவியலார்கள் கருத்துக் கேட்டபோதே ”உடனடியாக எப்படிக் கருத்துக்கூறுவது” எனக்கூறி மறுத்து விட்டார்.
” நான் வரவு செலவுத்திட்டக்குறையை முழுமையாக இன்னும் படிக்க வில்லை. அதனால் உடனடியாக என்னிடம் கேட்டால் நான் எப்படி கருத்துக் கூற முடியும்? அடர்க்கென்று சிறை இருக்கின்றனர் . முதலில் அவர்களிடம் கேளுங்கள். நான் படித்த பின்னர் கூறுகின்றேன் ”எனக்கூறி விட்டு சென்றார். இதேவேளை நேற்று ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவினால் செலவுத்திட்ட உரை முன்வைக்கப்பட்ட போது பொதுஜன பெரமுனவின் பொது செயலர் சாகர காரியவசம் சபைக்கு வரவில்லை.
2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியின் புரட்சிகரமான வரவு செலவுத்திட்டத்தில் ”கடனும் விற்பனையும்”மட்டுமே உள்ளதாக ஜே .வி.பி. தலைவரும் எம்.பி.யுமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பில் கருத்துக் கூறுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நாட்டை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு செல்லப்போகின்றது. நாட்டை முன்னேற்றக்கூடிய எந்த திட்டங்களையும் காண முடியவில்லை. ஜனாதிபதியின் புரட்சிகரமான 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ”கடனும் விற்பனையும்”மட்டுமே உள்ளது என்றார்.
1 comment
[…] முறையில் நடமாடியுள்ளார். மஹிந்தவின் இல்லத்திற்கு முன் நடமாடிய குறித்த […]