89
மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் ‘மிச்சாங்’ (“மிக்ஜாம்” என உச்சரிக்கப்படுகிறது) புயல் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடந்தது மற் றும் இந்த அமைப்பு படிப்படியாக வலுவிழந்து வருகிறது.
எனவே, தீவைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காலநிலையில் கடுமையான சூறாவளியான “MICHAUNG” தாக்கம் மேலும் குறைவடைந்துள்ளது.
மழையின் நிலை:
புத்தளத்திலிருந்து மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் குறிப்பாக மாலை அல்லது இரவு வேளைகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
காற்று:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (25-35) கிலோமீற்றர் வரை காணப்படும். சிலாபத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையிலும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (40-45) கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.