81
இலங்கையின் கொழும்பு நகரில் ஆபத்தான மரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறிப்பாக சுமார் 100 ஆண்டுகளுக்கு அதிகமான 558 மரங்கள் ஆபத்தானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன என கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அடையாளம் காணப்பட்ட 214 மரங்கள் கொழும்பு மாநகர சபையின் தலையீட்டின் மூலம் அகற்றப்பட்டுள்ளன எனவும் ஆணையாளர் தெரிவித்தார்.
மேலும், சில மரங்களை பாதுகாக்கும் நோக்கில் அவற்றின் கிளைகள் வெட்டப்பட்டு மரங்களை சமப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.