89
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில், இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும், வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகலாம்.
இதனைத் தவிர, மேல் மாகாணம் உட்பட காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மக்கள் அவதானமாக இருக்கவும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.