2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறிக்கு வரும் குறித்த தடை பரீட்சைகள் திணைக்களத்தால் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனவரி 4 ஆம் திகதி முதல் 31 திகதி வரையில் நாடளாவிய ரீதியிள்ள 2,298 பரீட்சை நிலையங்களில் உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ளது.
இதன்படி, பரீட்சை நிறைவடையும் வரையில் பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை நடத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.