80
2023 ஒருநாள் உலகக்கோப்பையை அவுஸ்திரேலியா வென்றது.அகமதாபாத்தில் நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.
டாஸ் வென்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 47 (31) ரன்கள் விளாசினார். கில், ஷ்ரேயாஸ் ஐயர் சொதப்பிய நிலையில் விராட் கோலி அரைசதம் அடித்தார்.
அவர் 54 ரன்கள் எடுத்து வெளியேற, ஜடேஜா 9 ரன்களில் நடையை கட்டினார். எனினும் கே.எல்.ராகுல் நிதானமாக ஆடி 66 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் வந்த வீரர்கள் ரன்கள் எடுக்க தவறியதால் இந்திய அணி 240 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் மற்றும் ஹேசல்வுட் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
டேவிட் வார்னரை 7 ரன்களில் ஷமியும், மார்ஷை 15 ரன்களில் பும்ராவும் வெளியேற்றினர்.
அடுத்து வந்த ஸ்மித் 4 ரன்களில் பும்ரா ஓவரில் அவுட் ஆனார். ஆனால் டிராவிஸ் ஹெட் (Travis Head) இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். அதிரடியில் மிரட்டிய அவர் விரைவாக ரன்களை குவித்தார். அவருக்கு உறுதுணையாக லபுஷேன் (Labuschane) பொறுமையாக ஆடினார்.
இவர்களின் கூட்டணி 192 ரன்கள் குவித்து. சதம் விளாசிய ஹெட் 137 (120) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர், 15 பவுண்டரிகள் அடங்கும். வெற்றிக்கு 2 ரன்களே தேவை என்ற நிலையில் மேக்ஸ்வெல் (Maxwell) அதனை எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.
இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 6வது முறையாக உலகக்கோப்பையை தட்டிச் சென்றது.
1 comment
[…] குறிப்பாக உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி பெறும் என்று கூறினார். […]