யாழ்ப்பாணம், தெற்கு உரும்பிராய பகுதியில் நேற்று (18) இரவு முதியவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த தெற்கு உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் பிறேமராசன் என்ற 66 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கானவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
வாய் பேச முடியாத அதே பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபர் கோப்பாயில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.நீதிவான் ஏ.ஆனந்தராஜா இன்று கொலை நடந்த இடத்தை பார்வையிட்டார். குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்