Home » காதலரை கரம் பிடித்த நடிகை ரகுல் பிரீத் சிங்

காதலரை கரம் பிடித்த நடிகை ரகுல் பிரீத் சிங்

by Vaishnavi S
0 comment

பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங், தனது நீண்ட நாள் காதலரை மணந்தார்.

தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ,NGK, தீரன் அதிகாரம் ஒன்று, அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங் (Rakul Preet Singh).

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட சில மொழிப் படங்களிலும் நடித்து புகழ்பெற்ற நடிகையாக உயர்ந்தார்.

 

இந்த நிலையில் தான் 2021ஆம் ஆண்டில் ஜாக்கி பாக்னானி (Jackky Bhagnani) என்பவரை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

கோவாவில் இந்த காதல் ஜோடிக்கு திருமணம் நடந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ரகுல் மற்றும் ஜாக்கி ஜோடி, ஆனந்த் கராஜ் மற்றும் சிந்தி பாணியிலான இரண்டு திருமண நிகழ்வில் கலந்துகொண்டு தங்கள் கலாச்சாரத்தை பிரதிபலித்ததாக கூறப்படுகிறது.

இதில் நடிகர் வருண் தவான், நடிகை ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா, பூமி பெட்னேகர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டதாக தெரிய வந்துள்ளது.

ரகுலின் ‘Chuddha’ விழா காலையில் நடத்த திட்டமிடப்பட்டதாகவும், 3.30 மணிக்குப் பின்னர் ITC Grand South Goaயில் அவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்ததாகவும் ஊடகத்திடம் தெரிவித்தார்.

அவரது நண்பரும், நடிகருமான வருண் தவான் தம்பதிக்காக சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியதாகவும்,சங்கீத் நிகழ்வில் ‘Coolie No 1’ படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு அவர் நடனமாடியதாகவும் தெரிய வந்துள்ளது.

ஆனால் சமூக ஊடகங்களில் இந்த ஜோடி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00