70
மருதங்கேணி பகுதியில் விசாரணைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தரின் மோட்டார் வண்டிக்கு தீ வைக்க முற்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மருதங்கேணி – நித்தியவெட்டை பகுதிக்கு விசாரணை ஒன்றுக்காக தனது மோட்டார் வண்டியில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர், மோட்டார் வண்டியை வீதியில் நிறுத்தி விட்டு, விசாரணை நிமித்தம் வீடொன்றுக்கு சென்றுள்ளார்.
இந்தநிலையில் மதுபோதையில் வந்த நபர் வீதியில் நின்ற மோட்டார் வண்டிக்கு தீ வைக்க முற்பட்டுள்ளார்.
இதனை அவதானித்த பொலிஸ் உத்தியோகத்தர் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளார்.
குறித்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தீயில் மோட்டார் வண்டியின் என்ஜின் பகுதி சிறிதளவு சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.