Home » திரிஷாவுக்கு ஆதரவாக நடிகர் விஷால் கண்டன அறிக்கை

திரிஷாவுக்கு ஆதரவாக நடிகர் விஷால் கண்டன அறிக்கை

by Vaishnavi S
0 comment

நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

தனது கட்சியினர் சிலர் குறித்து குற்றம்சாட்டிய அவர் நடிகை திரிஷா, கருணாஸ் ஆகியோர் குறித்தும் அவர் பேசியது பரபரப்பானது.

இதற்கு நடிகர் சேரன் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நடிகை திரிஷாவும் தனது எக்ஸ் தள பக்கத்தில்

‘கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களையும், கேவலமான மனிதர்களையும் திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பானது.

தேவையான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இனிமேல் கூற வேண்டிய மற்றும் செய்ய வேண்டிய அனைத்தும் எனது சட்டத்துறை செய்யும்’ என தெரிவித்தார்.

இந்த நிலையில் நடிகர் விஷால் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “பூமியில் இருக்கும் இத்தகைய தீய சக்திக்கு பதிலடி கொடுக்க X தளத்தில் பதிவிடுவது உண்மையிலேயே வேதனை அளிக்கிறது.

நீங்கள் செய்த இந்த காரியம் குறிப்பிட கூட தகுதியற்றது. நான் உங்களை கண்டிக்க விரும்பவில்லை. ஆனால் நீங்கள் இதற்கான தண்டனையை அனுபவிப்பீர்கள்.

பிரபலங்களைப் பற்றிய எதிர்மறையான விளம்பரங்களில் பணம் சம்பாதிப்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது.

இதை விட்டுவிட்டு வேறு ஏதாவது வேலை இருந்தால் பாருங்கள். குறைந்தபட்சம் சில அடிப்படை ஒழுக்கங்களையாவது கற்றுக்கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00