சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு ‘அமரன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
1992ஆம் ஆண்டில் கார்த்திக் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அமரன்.
தற்போது வெளியாகியுள்ள டைட்டில் டீசர் ராணுவ பின்னணியில் நடக்கும் கதைக்களத்தை காட்டுகிறது.
அதிரடி ஆக்ஷன் படமாக இது இருக்கும் என்பது டீசர் மூலம் தெரிய வருகிறது.
ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படம் தான் இது என்று கூறப்பட்டது.
அதற்கு ஏற்றாற்போல் முகுந்த் எனும் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் தோன்றுகிறார்.
ரங்கூன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன் பிறந்தநாளான இன்று அமரன் பட டீசர் இணையத்தில் வைரலாகியுள்ளது.