இறக்குமதி செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ள 6 மில்லியன் முட்டைகளை இன்று அல்லது நாளைக்குள் சந்தைக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச வணிக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
சத்தோச நிறுவனத்தில் ஊடாக குறித்த முட்டைகளை கொள்வனவு செய்யும் வாய்ப்பு மக்கள் பெற முடியும் என அரச வணிக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பண்டிகை காலம் என்பதால் தற்போது நாட்டில் முட்டையின் விலை அதிகரித்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் நோக்குடன் துறைசார் அமைச்சரின் ஆலோசனையில் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பண்டிகை காலம் என்பதால் நாளொன்றிட்கு 2 மில்லியன் முட்டைகளை சதோச விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளது.