67
மன்னார் தள்ளாடி பிரதான வீதியில் மீன் ஏற்றி வந்த மகேந்திரா ரக வாகனம் நேற்றைய தினம் (19) மாலை வீதி அருகில் காணப்படும் வீதியோர தடையில் மோதி ஏற்பட்ட விபத்தில் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் தள்ளாடி ஊடாக பேசாலைக்கு பல ஆயிரக்கணக்கான கிலோ மீன் மற்றும் திருக்கை மீனுடன் பயணித்த மகேந்திரா ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வீதியோர தடையில் மோதி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளது.
வாகனத்தில் இருந்த ஆயிரக்கணக்கான கிலோ மீன்கள் வீதியில் தூக்கி வீசப்பட்ட நிலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான வாகன சாரதி மீட்கப்பட்டு வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.