படுகாயமடைந்த நபர் வீதியோரத்தில் உட்கார்ந்திருந்திருந்தபோது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த 17 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார்.
அந்த இளைஞரின் சடலம் குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குச்சவெளி – நாவல்சோலை பகுதியைச் சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த மற்றைய நபர் (வீதியில் இருந்த நபர்) குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.