63
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபரந்தன்12 ஏக்கர் பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் உயிரிழந்த 17 வயதுடைய இரண்டு சிறுமிகளும் தம்மால் இந்த பூமியில் வாழ முடியாது என தெரிவித்து தமது இறப்புக்கு காரணம் தாங்களே என கடிதம் ஒன்றை இருவரும் அதில் கையொப்பம் இட்ட நிலையில் குறித்த கடிதம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இரண்டு சிறுமிகளும் தற்பொழுது க.பொ.த சாதாரணப் பரீச்சைக்கு தோற்றி பெறுபேறுக்காக காத்திருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்