65
கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ராகமையை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளார்.
ஆறு குழந்தைகளும் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் சிசு பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்தியர் வைத்தியர் சமன் குமார தெரிவித்துள்ளார்.
அவர்களில் ஐவர் தற்போது காசல் வைத்தியசாலையிலும் ஒரு குழந்தை கொழும்பு தேசிய சிறுவர் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.