இலங்கை ஆதிவாசிகள் யாழ்ப்பாணத்துக்கு இன்று (20) விஜயம் மேற்கொண்டனர்.
ஆதிவாசிகள் தலைவர் குரு வலத்து வர்மே வலத்த முதன் தலைமையிலான ஆதிவாசிகள் குழுவினர் முதல் தடவையாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கையின் மஹியங்கனையில் வசித்து வருகின்ற ஆதிவாசிகள் குழுவினர் இரண்டு நாள் விஐயம் மேற்கொண்டு இன்று யாழ்ப்பாணம் வந்தனர்.
காலையில் வவுனியாவில் அவர்கள் மத வழிபாடுகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மதியம் யாழ்ப்பாணத்த வந்தனர்.
யாழ்ப்பாணத்துக்கான இரண்டு நாள் சுற்றுப் பயணத்தின் பல்வேறு பிரசித்தி பெற்ற இடங்களைச் சுற்றிப் பார்வையிடவுள்ள அவர்கள், இங்குள்ள ஆலயங்களுக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர்.
ஆதிவாசிகளின் தலைவர் தலைமையிலான இந்தக் குழுவில் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை குடும்பம் குடும்பமாகவே பலரும் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.