65
அடுத்த ஆண்டுக்கான பாதீட்டில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள இழப்பீட்டு நிதியை தாம் ஏற்கப் போவதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் யாழ்ப்பாணம் மாவட்ட உறவினர்களின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 14 ஆண்டுகளாக தாம் நீதிக்காகவே போராடி வருவதாகவும், கண்துடைப்புக்காக நிதியை வழங்க வேண்டாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் யாழ்ப்பாண மாவட்ட சங்கத்தின் தலைவி சிவபாலன் இளங்கோதை இவ்வாறு தெரிவித்தார்.