81
தமிழ்த் தினப் போட்டியில் அகில இலங்கை ரீதியாக வெற்றியீட்டிய மாணவர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு தமிழ்த் தேசிய கலை இலக்கியப் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஈழத்து எழுத்தாளரும் தமிழ்த் தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவருமான தீபச்செல்வன் தலைமையில் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் அகில இலங்கை தமிழ் தினப் போட்டியில் பேச்சுப் போட்டியில் முதல் இடம் பெற்ற கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவன் பா. சயந்தன், இலக்கிய விமர்சனப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற கிளிநொச்சி இராமநாதபுரம் கிழக்கு அ.த.க பாடசாலை மாணவி சி. சிந்துஜா மற்றும் வாசிப்புப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற கிளிநொச்சி பளை தர்மக்கேணி அ.த.க பாடசாலை மாணவன் சி. ரனுசன் ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.