107
2024 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்கள் கடினமானவையாக அமையலாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
குறித்த சந்திப்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்த வருடத்திற்கான உள்நாட்டு உற்பத்தி இலக்கை குறிப்பிடத்தக்க அளவு அடையலாம்.
நாடு 2018 ஆண்டின் நிலைமைக்கு இன்னமும் திரும்பவில்லை. ஒரே தடவையில் முடியாமற்போனாலும், சிறிது சிறிதாக மீண்டெழ முடியும் என்றார்.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டிலிருந்தே நாட்டின் சரியான பயணத்தை ஆரம்பிக்க வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போதைய நடவடிக்கைகள் அதற்கான தயார்ப்படுத்தல் மாத்திரமே எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.