இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடிதம் ஒன்றின் மூலம் புதுச்சேரியின் முதல்வர் என்.ரங்கசாமி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அண்மையில் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்கள் காரைக்காலைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் அவர்களையும் அவர்களது படகுகளையும் இலங்கை அரசாங்கம் விடுவிக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, என்.ரங்கசாமி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.