107
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இரண்டாவது நாளாக இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான ஜெரோம் பெர்னாண்டோவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (01) பிற்பகல் கைது செய்தனர்.
பௌத்தம் உள்ளிட்ட மதங்களை இழிவுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு சில மாதங்களாக வௌிநாட்டில் இருந்து நாடு திரும்பிய ஜெரோம் பெர்னாண்டோ நேற்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிருந்தமை குறிப்பிடத்தக்கது.