67
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர பிராந்தியங்களின் இளைஞர்களை ஒன்றிணைத்த தமிழ்க்குடில் ஒன்றியத்தின் இராவணன் விளையாட்டு அணியிலிருந்து வீரர் சூசைநாதர் மிறாஜ் அவர்கள் இலங்கை மட்டைப்பந்தாட்ட சபையினரால் மாற்றுத்திறனாளிகளுக்கான வட பிராந்திய இலங்கை அணியில் தேர்வு செய்யப்பட்டது மட்டுமல்லாது அவ் அணியின் பிரதி அணித்தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
தனது திறமையால் மட்டுமே இன்று தமிழ்க்குடில் ஒன்றியத்திற்கும் இராவணன் அணிக்கும் மட்டுமல்லாது முல்லை மண்ணிற்கே பெருமை சேர்த்திருக்கும் வீரன் சூசைநாதர் மிறாஜ் அவர்களை வாழ்த்தி, அவர் எதிர்காலத்திற்கும் அவர் போன்ற எம் இன இளையோர் எதிர்காலத்திற்குமாய் வலுச் சேர்க்கும் காலம் சமைப்போம்!