122
பிரபல இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பானி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்கு, இரண்டு இளைஞர்கள் 8 நாட்களில் 3 மின்னஞ்சல்கள் மூலம் 400கோடி ரூபாய் வரையில் பணம் கேட்டதுடன், கொடுக்கவில்லை என்றால் அம்பானியை ஒழித்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, விசாரணையை தொடங்கிய பொலிஸார் தெலங்கானா மாநிலம் வாரங்கலைச் சேர்ந்த ரமேஷ் வன்ரபதி (19) மற்றும் குஜராத்தைச் சேர்ந்த ஷதாப் கான் (21) ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.