91
இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோஹ்லி ஒருநாள் கிரிக்கெட்டில் 50வது சதம் விளாசி சரித்திரம் படைத்தார்.
நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது.
கேப்டன் ரோஹித் சர்மா சிக்ஸர் பவுண்டரிகள் என ருத்ர தாண்டவம் ஆடினார்.
29 பந்துகளை எதிர்கொண்ட அவர் 47 ரன்கள் விளாசினார். இதில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும்.
அதன் பின்னர் சுப்மன் கில் தாக்குதலில் ஈடுபட்டார். நியூஸிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்த அவர் 65 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் குவித்தார்.
ஆனால் அவர் தசைப்பிடிப்பு காரணமாக பாதியில் வெளியேறினார்.
அடுத்து ஷ்ரேயாஸ் ஐயர் கோஹ்லியுடன் இணைந்து மிரட்டினார்.
இவர்கள் கூட்டணியில் இந்திய அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
ஒருபுறம் ஷ்ரேயாஸ் அதிரடியில் மிரட்ட, கோஹ்லி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அரைசதம் கடந்த அவர் தனது 50வது ஒருநாள் சதத்தினை பூர்த்தி செய்தார்.
இதன்மூலம் சச்சினின் (49) சாதனையை முறியடித்த கோஹ்லி, கிரிக்கெட்டில் புதிய சகாப்தம் படைத்தார்.
அதாவது 50 சதங்கள் என்பது ஒரு இமாலய சாதனை ஆகும். அதிலும் குறிப்பாக உலகக்கோப்பையில் இந்த சாதனையை செய்துள்ளார்.