117
யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ண விளையாட்டுப்போட்டி நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.
நிகழ்வானது மாவட்டச் செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளரும், நலன்புரி சங்கத் தலைவருமான சுரேந்திரநாதன் தலைமையில் வேலணை துறையூர் ஐயனார் கழக விளையாட்டு மைதானத்தில் நேற்று பிற்பகல் 1 மணிக்கு இடம்பெற்றது.
நிகழ்வில், பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபரும், நலன்புரி சங்க போசகருமான திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் கலந்து கொண்டார்.
அத்துடன், சிறப்பு விருந்தினர்களாக மேலதிக அரசாங்க அதிபரும் உபபோசகருமான திரு.மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.கனகராஜா ஸ்ரீமோகனன் மற்றும் கௌரவ விருந்தினராக வேலணை பிரதேச செயலாளர் திரு.கயிலாசபிள்ளை சிவகரன் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகம் உட்பட பதினைந்து பிரதேச செயலகங்கள் இந்த வெற்றிக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றின.
போட்டியில் பருத்தித்துறை பிரதேச செயலகம் முதலாம் இடத்திதையும், தெல்லிப்பழை பிரதேச செயலகம் இரண்டாம் இஇடத்தையும், கரவெட்டி பிரதேச செயலகம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
நிகழ்வில், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தார்கள்.