93
ஒருவனுடைய முகத்தோற்றத்தில் முக்கிய அங்கம் வகிப்பது தலைமுடி தான்.
பலவிதமான சிகை அலங்காரம் மூலம் தன்னை அழகுபடுத்திக் காட்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஆனால், இப்போது
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் பலரும் முடி உதிரும் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை ஆகும்.
பலருக்கு செயற்கையான ஷாம்புவை பயன்படுத்துவது கூட முடி உதிர்வை தரக்கூடும்.
முடி உதிர்தல் அதிகமாகும் பட்சத்தில் முழுதும் உதிர்ந்து வழுக்கை தலையாக மாற வாய்ப்புள்ளது. இது ஆண்களின் முகத்தோற்றம் மற்றும் தன்னம்பிக்கையை முற்றிலும் கபளீகரம் செய்துவிடுகிறது.
முடி உதிர்வதன் காரணமாக சிலருக்கு மரபியல் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றால் ஏற்படும். ஆண்ட்ரோஜெனடிக் அலோபீசியா எனப்படும் மரபணு பிரச்சினை தலைமுறை தலைமுறையாக ஆண்களின் வழுக்கைக்கு காரணமாகிறது.
இரும்புச்சத்து குறைபாட்டினால் முடி உதிர்ந்து வழுக்கை தலை ஏற்படுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.மேலும் இனிப்பு உணவுகள் உச்சந்தலையில் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஆதலால் இனிப்பு உணவுகளும் முடி உதிர்தலுக்கான ஒரு காரணமாக அமைகின்றன.