88
பக்கவாதம் ஒரு கொடுமையான நோயாகவே மாறிவருகிறது. இது ஒவ்வொரு வருடமும் சுமார் 1.5 கோடி பேரை தாக்குகிறது. அதில் 50 லட்சம் மக்களை நிரந்தரமாக ஊனமுற்றோர்களாக மாற்றிவிடுகிறது.
ஒவ்வொரு 40 விநாடிகளுக்கும் ஒருவர் இதனால் பாதிப்படைகிறார். ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கு ஒருவர் இறக்கிறார்.
ஆளையே முடக்கும் நோயாக இது உள்ளது. 80% பக்கவாத வழக்குகள் முன்கூட்டியே தடுக்க கூடியவை தான் என்று நரம்பியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒரு நபரின் வயது, பாலினம், குடும்ப வரலாறு மற்றும் வாழ்க்கை முறை ஆகியன பக்கவாதத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
இரத்த அழுத்தம், நீரழிவு நோய், உடல் பருமன், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியன பக்கவாதத்தை வரவழைக்க அநேக சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளன.
பக்கவாதம் வந்த ஒருவருக்கு பேசுவதில் சிக்கல், முகம் ஒருபுறமாக இழுத்தக்கொள்வது, கடுமையான தலைவலி, பார்வையில் குறைபாடு, கை மற்றும் கால் உறுப்புகளை இயக்க முடியாத நிலை போன்ற சிக்கல்கள் உருவாகும்.
பின்பற்ற வேண்டியவை
ஆயினும் இந்த நோயை உடற்பயிற்சி செய்வதன் மூலம் தவிர்க்க முடியும். உயர் இரத்த அழுத்தம், 140/90 mm Hg க்கு மேல் இருந்தால் 75% கடுமையான பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எனவே உடற்பயிற்சி செய்வது இரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு உதவுகிறது.
மேலும் குறைவான சோடியம் உள்ள உணவுகளை தவிர்ப்பது, தியானம், யோகா செய்வதன் மூலம் பக்கவாதத்தில் இருந்து தப்பிக்க முடியும்.
புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவை பக்கவாதத்தை சீக்கிரம் வரவழைக்கவே உதவும். ஆகவே அதை அறவே தவிர்த்து நல்ல உணவு முறையையும், தினமும் செய்யும் உடற்பயிற்சியும் மட்டுமே நோயின்றி வாழ ஒரே வழியாக உள்ளது.