Home » மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்…

மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்…

by namthesamnews
0 comment
கார்த்திகை 27ம் திகதி தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் நாள் கொண்டாடபபடவுள்ள நிலையில், மாவீரர் வாரம் இன்று செவ்வாய்கிழமை  ஆரம்பமாகியுள்ளது.
இந் நிலையில், மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது.

நிகழ்வில், பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

பல்கலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதி பல்கலைக்கழக மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. அத்துடன் தூபியைச் சுற்றி சிவப்பு மஞ்சள் நிறத்திலான வர்ணக்கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது இன்னுயிரை தியாகம் செய்தவர்கள் நினைவாக, தமிழர் தாயகம் எங்கும் வருடந்தோறும் கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00