வடமேற்கு பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து ஒன்று மலைப்பாங்கான நிலப்பரப்பில் இருந்து சறுக்கி, பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்
இந்த விபத்து சம்பவம் இன்று (03) காலை இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ராவல்பிண்டியில் இருந்து கில்கிட் நோக்கி சென்ற இந்த பேருந்து கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் காரகோரம் நெடுஞ்சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 15 பேர் சிலாஸில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பேருந்தில் குறைந்தது 30 பயணிகள் பயணம் செய்திருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.