Home » அஸ்வெசும டிசம்பர் மாத கொடுப்பனவு வங்கிகளுக்கு..

அஸ்வெசும டிசம்பர் மாத கொடுப்பனவு வங்கிகளுக்கு..

by Vaishnavi S
0 comment

அஸ்வெசும டிசம்பர் மாத தவணையை செலுத்துவதற்காக 8,700 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

தற்போது 1,410,064 குடும்பங்கள் அஸ்வெசும பயனாளி குடும்பங்களாக இனம்காணப்பட்டுள்ளன.

ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்கு செலுத்தப்பட்ட மொத்தத் தொகை 51,967 மில்லியன் ரூபாவாகும்.

அஸ்வெசும பயனாளி குடும்பங்களில், 303,199 மிகவும் ஏழ்மையான குடும்பங்கள், 606,496 ஏழ்மையான குடும்பங்கள், 290,624 பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் மற்றும் 209,745 நடுத்தர குடும்பங்கள் என இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00