83
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தின் ஆலுவா பகுதியை சேர்ந்தவர் அபிஸ் முகமது.
இவரது 14 வயது மகள் வேறு மதத்தைச் சேர்ந்த மாணவனை காதலித்து வந்ததை அறிந்த அபிஸ் முகமது, தனது மகளை இரும்புக் கம்பியால் கொடூரமாக தாக்கியுள்ளார்.
அத்துடன் வாயில் பூச்சு மருந்தை ஊற்றியுள்ளார். உயிருக்கு போராடிய சிறுமி ஒரு வாரத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, மத வெறியால் பெற்ற மகளை கொடூரமாக கொலை செய்த தந்தை அபிஸ் முகமதுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.