89
கொள்ளுப்பிடி பொலிஸாரால் மது போதையில் வாகனம் செலுத்திய பிரித்தானிய இளைஞர் ஒருவர் கைது செய்துள்ளனர்.
போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த நபர் கைதாகியுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை 22 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை குறித்து முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.