71
தீபாவளி நெருங்கும் நிலையில் பட்டாசு கடைகளுக்கு உரிமம் கிடைக்கவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் இராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் இராஜேந்திர பாலாஜி,
“தீபாவளிக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், பட்டாசு கடைகளுக்கு உரிமம் கிடைக்கவில்லை எனில் அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்” எனக் கூறினார்.