நியூசிலாந்தின் டெவன் கான்வே காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக கூறப்படுவது CSK ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
ஐபிஎல் தொடர் இம்மாதம் 22ஆம் திகதி தொடங்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் ஆயத்தமாகி வருகின்றன.
இந்த நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வீரர் டெவன் கான்வே (Devon Conway) காயம் காரணமாக விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
CSK அணியின் தொடக்க வீரரான கான்வேவுக்கு சமீபத்தில் இடது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதன் காரணமாக 8 வாரங்கள் அவர் அறுவை சிகிச்சைக்கு பின் ஓய்வு எடுக்க வேண்டும். எனவே மே மாதம் முதல் வாரம் வரை அவர் எந்த போட்டிகளிலும் விளையாட முடியாது என்று கூறப்படுகிறது.
அவருக்கு பதிலாக மற்றொரு நியூசிலாந்து வீரர் டேர்ல் மிட்செல் தொடக்க வீரராக களமிறங்கலாம் என்ற தகவல் கசிந்துள்ளது.
டெவன் கான்வே 23 ஐபிஎல் போட்டிகளில் 924 ரன்கள் குவித்துள்ளார். இதில் 9 அரைசதங்கள் அடங்கும். மேலும் 30 சிக்ஸர், 99 பவுண்டரிகள் அடித்துள்ளார்.