Home » Live Location தொடர்பில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்யும் Instagram

Live Location தொடர்பில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்யும் Instagram

by Vaishnavi S
0 comment

Friend map எனும் புதிய Live Location பகிர்வு அம்சத்தை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ளது.

சமூக வலைதள பயனர்கள் அதிகளவில் பயன்படுத்தும் செயலியாக இன்ஸ்டாகிராம் (Instagram) உள்ளது.

அடிக்கடி தமது பயனர்களுக்காக பல அம்சங்களை கொண்டுவரும் இன்ஸ்டாகிராம், தற்போது Friend Map எனும் புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளது.

Live Location Sharing தொடர்பிலான இந்த புதிய அம்சம் ‘Friend Map’ என அழைக்கப்படுகிறது. இதில் பல்வேறு Options கொடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, பயனர் ஒருவர் தமது Location-ஐ யார் பார்க்கலாம், யாருடன் பகிரலாம் உள்ளிட்டவை Options உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல் ‘Notes’, ‘Ghost Mode’ உள்ளிட்ட Options-ஐ பயன்படுத்தி, பயனரின் Last Active Location-ஐ Hide செய்து கொள்ளலாம்.

அத்துடன் நெருங்கிய நண்பர்கள் List செய்து, ‘Close Friends’ Option மூலம் Location அனுப்பலாம்.

மெட்டா இந்த வசதியை அறிமுகம் செய்தால்Snapchat-யில் உள்ள Snap Map வசதியை போன்று இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

தற்போது சோதனை செய்யப்பட்டு வரும் இந்த அம்சத்தை, இன்ஸ்டாகிராம் நண்பர்களுடன் பகிர முடியும் என மெட்டா (META) செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00