Home » பிரித்தானியா வர விரும்பும் ஹரி! தடையாக மேகன்?

பிரித்தானியா வர விரும்பும் ஹரி! தடையாக மேகன்?

by Vaishnavi S
0 comment

இளவரசர் ஹரி மீண்டும் பிரித்தானியாவுக்கு திரும்ப விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க நடிகை மேகனை திருமணம் செய்த பின், இளவரசர் ஹரி அரச குடும்பத்தில் இருந்து பிரிந்து அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ஆர்ச்சி, லிபிடேட் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் மன்னர் சார்லஸூக்கு புற்றுநோய் இருப்பதை அறிந்த ஹரி, பிரித்தானியாவிற்கு உடனடியாக வந்து தந்தையை பார்த்துவிட்டு சென்றார்.

ஆனால், அவர் நிரந்தரமாக பிரித்தானியாவில் இருக்க விரும்புவதாக அரண்மனை வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

“மீண்டும் அரச குடும்பத்துடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள ஹரி தனது குடும்பத்துடன் பிரித்தானியா வர விரும்புகிறார். ஆனால்,அவரது மனைவி மேகன் பிரித்தானியா வருவதற்கு விரும்பவில்லை. அவருக்கு அசெளகரியமாக இருப்பதாக உணர்கிறார்” என்றார்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00