146
உலகில் அதிக கல்வியறிவு கொண்ட நாடுகளின் பட்டியலை பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கனடா முதல் இடத்தில் உள்ளது. இங்கு 59.96% படித்தவர்களாக உள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக ஜப்பான்(52.68%), லசம்பர்க், தென்கொரியா ஆகிய நாடுகள் உள்ளன.
உலக நாடுகளில் பெரிய அளவில் பேசப்பட்டு வரும் அமெரிக்கா 6வது இடத்திலும், பிரித்தானியா 8வது இடத்தையும் பிடித்துள்ளன. முதல் 10 இடங்களில் இலங்கை, இந்தியா இடம் பெறவில்லை.