அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
சூன் 1 முதல் சூன் 29 வரை போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் அமெரிக்காவும், கனடாவும் மோதுகின்றன.
மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், 5 அணிகள் ஒரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இலங்கை அணி D பிரிவில் இடம்பெற்றுள்ளது.
வட அமெரிக்க நாடு ஒன்றில் உலகக்கோப்பை தொடர் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். போட்டியை நடத்தும் நாடாக மேற்கிந்திய தீவுகள் இருப்பதால் அந்த அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
சூன் 3ஆம் திகதி நடைபெற உள்ள போட்டியில் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
அதனைத் தொடர்ந்து 7ஆம் திகதி வங்கதேசத்தையும், 11ஆம் திகதி நேபாளத்தையும், 16ஆம் திகதி நெதர்லாந்தையும் இலங்கை அணி எதிர்கொள்கிறது.