Home » அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக 48 ஆண்டுகள் சிறை அனுபவித்த நபர்!

அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக 48 ஆண்டுகள் சிறை அனுபவித்த நபர்!

by namthesamnews
0 comment

அமெரிக்காவில் கொலை குற்றத்தில் ஈடுபட்டதாக 22 வயதில் கைது செய்யப்பட்ட நபர், தன் 71 வயதில் நிரபராதி என விடுவிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்க நீதிமன்ற வரலாற்றிலேயே குற்றச்செயலில் இருந்து விடுபட்டவர்களின் தேசிய பட்டியலில் மிக நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்த நபர் எனும் பெயர் பெற்றிருக்கிறார் 71 வயது கிளன் சிம்மன்ஸ்.

கடந்த 1974ஆம் ஆண்டு Edmond  எனும் மதுபான விடுதியில் Carolyn Sue Rogers என்ற நபர் கொல்லப்பட்ட வழக்கில் இருவர் குற்றவாளிகள் என கைது செய்யப்பட்டனர்.

கிளன் சிம்மன்ஸ் (Glynn Simmons) மற்றும் டான் ராபர்ட்ஸ் ஆகிய அந்த இருவர் மீதும் குற்றம் நிரூப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு 1975ஆம் ஆண்டு தண்டனை அறிவிக்கப்பட்டது.

முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் 1977யில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சூலை மாதம் இந்த வழக்கு மறுவிசாரணைக்கு வந்தது. அதில் சிம்மன்ஸ் குற்றமற்றவர் என தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதனால் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்த சிம்மன்ஸ் 71வது வயதில் விடுதலையானார்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00