60
சென்னையில் ஓடும் பேருந்தில் தொங்கியபடி, அபாயகரமாக சாகசத்தில் ஈடுபட்ட மாணவர்களை, பெண்ணொருவர் பொதுமக்கள் முன்னிலையில் கன்னத்தில் அறைந்து எச்சரித்த வீடியோ வைரலாகியுள்ளது.
ஓட்டுநரிடம் எச்சரிக்கை விடுத்த பெண் , தன்னை போலிஸ் என்று கூறிக்கொண்டு பேருந்தின் பின் வாசலில் அபாயகரமாக சாகசம் செய்த மாணவரை கன்னத்தில் அறைந்து எச்சரிக்கை விடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஓடும் பேருந்துகளில் சாகசங்கள் செய்வதும், தொங்கியபடி பயணிப்பதும் தான் கெத்து என்பதும், அதை செய்பவர்களை “ரூட்டு தல” என்றழைக்கும் கலாச்சாரமும் பெருகி வரும் நிலையில், இம்மாதிரி பொதுமக்களே தட்டி கேட்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.