87
நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியான லியோ படத்தின் வெற்றிவிழா கூட்டத்தில் அரசியல் பற்றிய பேச்சுக்கள் இடம்பெற்றது பேசுபொருள் ஆகியுள்ளது .
இந்நிலையில், சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவரிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான்,
“ஒரே நாளில் எதையும் சாதிக்க முடியாது. கட்சி தொடங்கியதுமே உடனே அதிகாரத்துக்கு வர முடியாது. கட்சி தொடங்கிய உடனே வென்றார் என்றால் அது புரட்சி தான். ஆனால், அப்படியான நிலை இப்போது உள்ளதா என்பதை யோசிக்க வேண்டும். தம்பி விஜய்யின் கனவு வெல்ல நான் வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்தார்.